வாழு... வாழ விடு! Spread Love , வச்சு செய்த நயன், விக்னேஷ் | Nayanthara | Vignesh Shivan
வாழு... வாழ விடு! Spread Love , வச்சு செய்த நயன், விக்னேஷ் | Nayanthara | Vignesh Shivan | Dhanush | Nayan Letter தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா இடையே நீண்ட காலம் ஒரு நல்ல நட்பு நீடித்தது. இந்த சூழலில் இன்று தனுஷை கடுமையாக விமர்சித்து 3 பக்கங்களுக்கு நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த படம், நானும் ரவுடிதான் தனுஷ் இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் சம்பவமாக தான் தனுஷை பற்றி நயன்தாரா கடுமையாக விமர்சித்து உள்ளார். அவரது அறிக்கை; எந்த பின்புலம் இன்றி வந்த என்னை போன்றவர்களுக்கு சினிமா என்பது போராடி வெல்லும் களம். தனி ஒரு பெண்ணாக கடின உழைப்பு, நேர்மையான அர்ப்பணிப்பால் இந்த நிலையை அடைந்துள்ளேன். தந்தை மற்றும் அண்ணன் துணையோடு நடிகராகி இன்று இயக்குனராகி இருக்கும் தனுஷ் இதை புரிந்து கொள்ள வேண்டும். Nayanthara: Beyond the Fairy Tale என்ற ஆவணப்படத்தை பல்வேறு தடைகளையும் கடந்து வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம். உங்களது பழிவாங்கும் நடவடிக்கையால் நான், எனது கணவர் மட்டுமின்றி இதற்காக உழைத்த அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். படத்தின் காட்சிகள் , பாடல்களை பயன்படுத்த உங்களிடம் தடையில்லா சான்று கேட்டு 2 ஆண்டுகளாக காத்திருந்தோம். நீங்கள் சம்மதிக்காததால் அந்த முடிவை கைவிட்டு. சில திருத்தங்கள் செய்து நாங்கள் பயன்படுத்தினோம். இதற்கான காரணம் வியாபார ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ இருந்தால் நிச்சயம் ஏற்றிருப்பேன். ஆனால் என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமே உங்களது இந்த நடவடிக்கை இருக்கிறது. ஆவணப்படத்தின் டிரைலரில் நாங்கள் பயன்படுத்திய 3 விநாடி வீடியோவிற்கு எதிராக வந்துள்ள உங்களின் நோட்டீஸ் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே பொது தளங்களில் பயன்படுத்தியவை தான், அதற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருப்பது நீங்கள் எப்படி பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைத போல், ஒரு சதவீதம் கூட நீங்கள் கிடையாது என்பதை நானும் எனது கணவரும் நன்றாக புரிந்து விட்டோம். 10 ஆண்டுகளாக போலியான முகமூடி அணிந்து வருகிறீர்கள். எனக்கு அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு உரிய பதில் அளிப்பேன். சட்டப்பூர்வமாக நீங்கள் பதில் அளித்தாலும் இறைவன் முன் பதில் அளிக்க முடியாது. அந்த படத்தின் வெற்றி, உங்களை உளவியல் ரீதியாக பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். அடுத்த இசை வெளியீட்டு விழாவில் இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை சொல்லி அதையே உண்மையை போல் நீங்கள் சொல்ல வாய்ப்புகள் அதிகம். ஜெர்மனிய மொழியின் Schaden freude எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதன் அர்த்தத்தை தெரிந்து இனி யாருக்கும் அதை செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைக்கு பிறரது துன்பத்தில் இன்பம் காணுதல் என பொருள். எனது ஆவண படத்தை ஒருமுறை பார்த்தால் உங்கள் எண்ணங்களும் நேர்மறையாக நிச்சயம் மாறும். எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் Spread Love என்பதை, ஒரே ஒரு முறையாவது உங்கள் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக நயன்தாரா கூறி உள்ளார். அதே நேரம், வாழுங்க.. வாழ விடுங்க என தனுஷ் பேசிய வீடியோவுடன் அவர் அனுப்பிய அவர் அனுப்பிய நோட்டீஸும் சேர்த்து தனுஷை விமர்சிக்கும் வகையில் விக்னேஷ் சிவனும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.