FBI தலைவராகிறார் இந்திய வம்சாவளி நபர் | Indian-American Kash Patel | FBI Director | Donald Trump
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஜனவரி 20ல் பதவி ஏற்க உள்ளார். தனது அமைச்சர்கள் மற்றும் பல உயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை டிரம்ப் அறிவித்து வருகிறார். இதில் அவரது இன்றைய அறிவிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது. உலகில் உள்ள உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானது அமெரிக்காவின் எப்.பி.ஐ. எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருக்கும். போர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இந்த அமைப்புக்கு முழு நேர வேலையாக தரப்பட்டிருக்கிறது. சவாலான பல முக்கிய வழக்குகளையும் எப்.பி.ஐ. கையாளும். இதன் தலைவராக இருப்பவருக்கு அதிகாரங்கள் ஏராளம். இந்த சூழலில் எப்.பி.ஐ., இயக்குனராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேலை நியமித்து டிரம்ப் அறிவித்துள்ளார்.