உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென்கொரியாவில் நடந்த பெரிய டிவிஸ்ட்! | emergency martial law | South Korea | Yoon Suk Yeol

தென்கொரியாவில் நடந்த பெரிய டிவிஸ்ட்! | emergency martial law | South Korea | Yoon Suk Yeol

தென்கொரியாவில் நடந்த பெரிய டிவிஸ்ட்! | emergency martial law | South Korea | Yoon Suk Yeol நேற்று இரவோடு இரவாக தென் கொரியாவில் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை அமல்படுத்தி அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் பரபரப்பை கிளப்பினார். வட கொரிய கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல் தென் கொரியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் சுதந்திரம் மற்றும் அமைதியை பறிக்கும் வகையில் தேச விரோத சக்திகள் நுழைந்து விட்டன. நம் பார்லிமென்ட், குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது. நாட்டை போதைப்பொருள் புகலிடமாக உருவாக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். இவற்றை தடுக்க தான் எமர்ஜென்சி ராணுவ சட்டத்தை கொண்டு வந்துள்ளேன். கூடிய விரைவில் தேச விரோத சக்திகளை ஒழித்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவேன் என தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் திடீர் அறிவிப்பு வெளியிட்டார். முன்னதாக அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் விவகாரத்தில் ஆளும் மக்கள் சக்தி கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இடையில் மோதல் போக்கு ஏற்பட்து. எதிர்க்கட்சிக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் சிலரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பார்லி முடங்கியது. இந்த சூழலில் அதிபரின் அறிவிப்பால் தென் கொரியாவில் பதற்றமான சூழல் நிலவியது. நாடு முழுதும் அதிபரின் அறிவிப்புக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டது. பார்லிமென்ட் சுற்றிலும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். ராணுவத்தின் ஆட்சியை கொண்டு வருவதற்கு எதிர்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரவில் நடந்த அவசர வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் எமர்ஜென்சி அறிவிப்பை நிராகரித்து ஒருமனதாக வாக்களித்தனர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300 உறுப்பினர்களில் 190 பேர் அவசரநிலையை எதிர்த்து ஓட்டளித்தனர். கடும் எதிர்ப்பால் எமர்ஜென்சி பிரகடனத்தை திரும்ப பெறுவதாக அதிகாலை 4:30 மணி அளவில் அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். 6 மணி நேரம் நிலவிய பெரும் குழப்பம் முடிவுக்கு வந்தது. அதே நேரம் அதிபரின் நடவடிக்கையை காரணம் காட்டி எதிர்க்கட்சி புதிய பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன. அதிபர் பதவி விலகும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தென் கொரியா அதிபர் எமர்ஜென்சியை அறிவித்தது அவருக்கே பெரிய தலைவலியாக மாறி உள்ளது.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி