உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்களை அழைத்து வந்து தாக்குதல்; ரத்தம் சொட்ட சொட்ட புகார்

ஆட்களை அழைத்து வந்து தாக்குதல்; ரத்தம் சொட்ட சொட்ட புகார்

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அண்ணாநகரை சேர்ந்தவர் ராமஜெயம். வீட்டின் அருகே ஒருமாதமாக ஓட்டல் நடத்துகிறார். நேற்றிரவு இவரது கடைக்கு சாப்பிட வந்த 2 பேர் தோசை ஆர்டர் செய்தனர். தோசை மெல்லியதாகவும், சிறியதாகவும் இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளனர். தடியான தோசை போட்டுதர வேண்டும் என்று அதட்டினர். ஓட்டல் உரிமையாளர் ராமஜெயம், சரி தருகிறேன் என கூறியபோதும், தோசை பற்றி அவர்கள் இருவரும் வாக்குவாதத்தை தொடர்ந்தனர். வார்த்தை முற்றிய நிலையில் இருவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். சிறிது நேரம் கழித்து மேலும் 4 பேரை அழைத்து வந்த அவர்கள், மீண்டும் தகராறு செய்தனர். ராமஜெயத்தை இழுத்துபோட்டு தாக்கியுள்ளனர்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ