ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா 16ல் லோக்சபாவில் தாக்கல் | One Nation One Election Bill | Lok Sabha
லோக்சபா தேர்தலோடு அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆராய்ந்து, ஆலோசனை வழங்க, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு, கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி அதன் அறிக்கையை கடந்த மார்ச்சில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து, ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, கடந்த 11ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.