உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடபழனி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை கொண்டாட்டம் களைகட்டியது! Vadapalani Andavar Temple

வடபழனி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை கொண்டாட்டம் களைகட்டியது! Vadapalani Andavar Temple

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் நேற்று திருக்கார்த்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வியாழக்கிழமை பரணி கார்த்திகையை முன்னிட்டு 108 விளக்குகள், வள்ளி, தேவசேனா சுப்ரமணியர் சன்னதியில் பக்தர்கள், உபயதாரர்கள் மூலம் ஏற்றப்பட்டது. மூலவர் சன்னதியில் 36 குத்து விளக்குகள் ஏற்றப்பட்டன. பிரகாரப்பகுதி 10 ஆயிரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை அபிஷேகம் முடிந்து மூலவர் முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. உச்சிகாலத்தில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் முருகன் காட்சி அளித்தார். அதை தொடர்ந்து கார்த்திகை பூஜை களைகட்டியது.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை