புத்தக கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்கும் வாசகர்கள்! Book Fair 2024 | Pondicherry | 1 lakh books
புத்தக கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்கும் வாசகர்கள்! Book Fair 2024 | Pondicherry | 1 lakh books புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் 28வது தேசிய புத்தக கண்காட்சி கடந்த 13ம் தேதி தொடங்கியது. முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். இதில் புதுச்சேரி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி முதலான பகுதிகளிலிருந்து 70 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகள் அமைத்துள்ளனர். கண்காட்சியில் மொத்தம் 15 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. புதுவை எழுத்தாளர்களின் நூல்களுக்கு தனி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் இடம்பெறும் நூல்களுக்கு 10 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படிக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக புத்தகங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு புத்தக சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடக்கும். 22ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் அனுமதி இலவசம். கடந்த ஆண்டு 80 லட்சம் புத்தகங்கள் விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு புத்தக விற்பனை ஒரு கோடியை எட்டும் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.