உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரோடு கிழக்கு தொகுதி ஸ்டாலின் ஆலோசனை! | Erode East Assembly seat | DMK | EVKS

ஈரோடு கிழக்கு தொகுதி ஸ்டாலின் ஆலோசனை! | Erode East Assembly seat | DMK | EVKS

ஈரோடு கிழக்கு தொகுதி ஸ்டாலின் ஆலோசனை! | Erode East Assembly seat | DMK | EVKS 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வென்றார். உடல் நலக்குறைவால் 2023 ஜனவரியில் அவர் இறந்தார். இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடவும், திருமகன் தந்தையும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான இளங்கோவனை நிறுத்த முதல்வர் ஸ்டாலின் தீர்மானித்தார். தேர்தலில் வென்று எம்எல்ஏவானார். சோக நிகழ்வாக அவரும் உடல் நலக்குறைவால் கடந்த 14ல் இறந்தார். இப்போது ஈரோடு கிழக்கு காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில், டில்லி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படும் என தகவல் பரவி உள்ளது. இந்த சூழலில் ஈரோட்டுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். சுற்றுப்பயணத்தில் இடைத்தேர்தல் பற்றிய பேச்சுவார்த்தையும் நடக்க உள்ளதாக திமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது; கூட்டணி விதிப்படி இடைத்தேர்தல் என்றாலே ஏற்கனவே போட்டியிட்ட கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு தருவது வழக்கம். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் பெயர் கடந்த இடைத்தேர்தலின் போதே 90 சதவீதம் முன்மொழியப்பட்டது. உள்ளூர் அமைச்சர் முத்துசாமியும், முதல்வர் ஸ்டாலினும், திமுகவுக்காகவும், தங்களுக்காகவும் கூட்டணியில் குரல் கொடுக்க ஒருவர் வேண்டும் என்ற நோக்கில் இளங்கோவனை நிறுத்தினர். இளங்கோவன் இறந்ததால் மீண்டும் அதே கட்சி அல்லது அதே குடும்பத்துக்கா என்ற சர்ச்சை முன் நிற்கிறது. ஈரோடு மாவட்ட காங்கிரசில் சஞ்சய் சம்பத், மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மொடக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி போன்றோர் உள்ளனர். அதேநேரம், திமுகவுக்கே வாய்ப்பு வழங்குவோம் என கட்சி மேலிடம் விரும்பி சமரசம் செய்தால், திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் பெயர் பட்டியலில் உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி முதலியார் சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளதால் செந்தில்குமார், சந்திரகுமார் பெயர் முன்னிற்கும். தேமுதிகவில் எம்எல்ஏவாக இருந்து 2016 சட்டசபை தேர்தலில் திமுகவில் இணைந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தோல்வியை தழுவியவர் சந்திர குமார். அதே நேரம் செந்தில் குமார் மற்றும் அவரது குடும்பத்தார் ஆரம்ப காலம் முதல் திமுகவில் மட்டுமே உள்ளதுடன், தொகுதி மற்றும் மாவட்ட அளவிலும், முதல்வர் வரையிலான தொடர்பிலும் உள்ளார். இது மட்டுமின்றி இடைத்தேர்தலில் செலவு செய்தல், ஒருங்கிணைத்தல், இளங்கோவனை விட கூடுதல் ஓட்டு பெறும் வகையில் ஒருவரை நிறுத்த வேண்டும் என முதல்வர் விரும்புவார். இவை அனைத்தும் இன்று ஈரோடு வரும் முதல்வர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து நிலைப்பாட்டை கூறி செல்வார் என்றனர்.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ