மாநில அரசின் மெத்தனத்தால் ரயில்வே திட்டங்கள் தாமதம்! Railway Projet |TN Government |Southern Railway
ரயில்வே திட்டங்கள் நாடு முழுதும் மண்டல வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கான செலவுகள், மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகள், ரயில்வேயின் தேவைகள் அடிப்படையில், ஒட்டுமொத்த நிதி கையிருப்பை பொறுத்து, ரயில்வேயால் அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள், தெற்கு ரயில்வே மண்டலம் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்தூர், மொரப்பூர் - தர்மபுரி, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை உட்பட 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 14,669 கோடி ரூபாயில் நடந்து வருகின்றன. இதில் 24 கி.மீ துார பணிகள், 1,223 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. அதுபோல், 967 கி.மீ துாரத்துக்கு 13,381 கோடி ரூபாயில், ஒன்பது வழித்தடங்களில் அகலப்பாதை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.