உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆல் பாஸ் தான்! அமைச்சர் விளக்கம் | All Pass | Education | Central Govt | TNgovt

ஆல் பாஸ் தான்! அமைச்சர் விளக்கம் | All Pass | Education | Central Govt | TNgovt

ஆல் பாஸ் தான்! அமைச்சர் விளக்கம் | All Pass | Education | Central Govt | TNgovt 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்ற விதிமுறையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்வில் தோல்வியுற்றால், 2 மாதங்களில் மறு தேர்வு எழுத வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே வகுப்பில் ஓராண்டு மீண்டும் படிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் 3,000 பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். மாநில அரசுகள் தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் தற்போதைய நிலையே தொடரும் என பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். மத்திய அரசின் விதிமுறைகள் மாற்றம் குறித்து குழப்பம் அடைய தேவை இல்லை. தமிழக பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை தேர்ச்சி என்ற நடைமுறையில் மாற்றம் இல்லை எனவும் அவர் அறிவித்து உள்ளார்.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை