உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ நிர்வாகி சம்பவத்தில் பதற வைக்கும் பின்னணி | Olagadam BJP worker case | olagadam selvaraj case

பாஜ நிர்வாகி சம்பவத்தில் பதற வைக்கும் பின்னணி | Olagadam BJP worker case | olagadam selvaraj case

பாஜ நிர்வாகி சம்பவத்தில் பதற வைக்கும் பின்னணி | Olagadam BJP worker case | olagadam selvaraj case ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற டில்லி செல்வராஜ் வயது 67. இவர் பாஜவில் இருந்தார். பிறமொழிப் பிரிவின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயலாளராக பதவி வகித்தார். செல்வராஜ் நல்ல வசதியானவர். டில்லியில் சேலை வியாபாரம் பார்த்து வந்தார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாகவே வசித்து வந்தார். 15 நாட்களுக்கு முன்பு டில்லியில் இருந்து சொந்த ஊர் வந்தவர் வழக்கம் போல் தனியாக தங்கி இருந்தார். 24ம் தேதி காலையில் இருந்து அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. செல்வராஜ் அக்கம் பகத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி அவரது உறவினர் கார்த்திக் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே கார்த்திக் மற்றும் செல்வராஜ் கார் டிரைவர் சுரேஷ், வீட்டுக்கு வந்து கதை தட்டினர். செல்வராஜ் கதவை திறக்கவில்லை. இதனால் மொட்டை மாடியில் ஏறி படிக்கட்டு வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தனர். ரத்தம் வழிந்தோடிய நிலையில் செல்வராஜ் இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த கார்த்திக், சுரேஷ் உடனடியாக போலீசுக்கு தகவல் கூறினர். டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் ஸ்பாட்டுக்கு வந்தனர். செல்வராஜ் கீழே விழுந்து அடிபட்டு இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என்று உடனடியாக தெரியவரவில்லை. வீட்டில் இருந்த எந்த பொருட்களும் கலையவில்லை. அதே நேரம் செல்வராஜ் அணிந்திருந்த நகைகள் மிஸ் ஆகி இருந்தன. இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். செல்வராஜ் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்று முதலில் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே பிரதே பரிசோதனை அறிக்கை வந்தது. கழுத்து பகுதியில் கூர்மையான ஆயுதம் மூலம் குத்தியதாலும், கழுத்தை இறுக்கியதாலுமே செல்வராஜ் உயிர் பிரிந்து இருக்கிறது. அவரது கழுத்து எலும்பும் முறிந்து இருக்கிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கை சொன்னது.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ