உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம்! | Kumbakonam Corporation meeting | Kumbakonam mayor

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம்! | Kumbakonam Corporation meeting | Kumbakonam mayor

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம்! | Kumbakonam Corporation meeting | Kumbakonam mayor | DMK கும்பகோணம் மாநகராட்சி மேயராக உள்ளார் காங்கிரசை சேர்ந்த சரவணன். தமிழகத்திலேயே ஒரே காங்கிரஸ் மேயரான இவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கும்பகோணம் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று கூடியது. தொடங்கியதும் கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி 50 தீர்மானங்களுக்கும் மேயர் கையொப்பமிட்ட ஆவணத்தை காட்டும்படி கேட்டார். கோப்புகளை காட்டாமல் மேயர் காலம் தாழ்த்தினார். தொடர்ந்து கூட்டம் இத்துடன் முடிந்துவிட்டதாக கூறிய சரவணன் அவரது அறைக்கு செல்ல முயன்றார். வேகமாக ஓடிச்சென்ற தட்சிணாமூர்த்தி, சரவணன் அறை கதவை சாத்தினார். கதவு முன் உட்கார்ந்து தர்ணா செய்தார். சரவணன் அவரை தாண்டி உள்ளே செல்ல முயன்றார். மேயர் தன்னை மிதித்து தாக்குவதாக தட்சிணாமூர்த்தி கூச்சலிட்டார். திடீரென தரையில் விழுந்த சரவணன், என்னை காப்பாத்துங்க! நெஞ்சு வலிக்குது, நெஞ்சுவலி வலிக்குது என அலறினார். பதறிப்போன கவுன்சிலர்கள் அவரை எழுப்பி , அறைக்குள் அழைத்து சென்றனர். கோப்புகளை கேட்டால் நெஞ்சுவலி வந்து விட்டது என மேயர் நடிக்கிறார். கோப்புகளை காட்ட அவருக்கு என்ன பயம் என விமர்சித்தபடி திமுக கவுன்சிலர்கள் நடையை கட்டினர். 47 உறுப்பினர்கள் கொண்ட இந்த மாநகராட்சியில் பெரும்பான்மையாக திமுகவிற்கு 38 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 2 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதிமுகவிற்கு 3, சிபிஎம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினரும் உள்ளனர். காங்கிரஸ் மேயர் தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தீர்மானங்களை கொண்டு வருவதாக திமுக கவுன்சிலர்கள் புகார் கூறுகின்றனர்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ