உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல் | Anna university student case

மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல் | Anna university student case

மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல் | Anna university student case | Offender Gnanasekaran | Kidnapping case | சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநில அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த 37 வயது ஞானசேகரன் கைதாகி இருக்கிறார். இவர், சைதாப்பேட்டை பகுதி திமுகவில் வட்ட அளவிலான பொறுப்பில் இருந்த போதும், ஞானசேகரன் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் அல்ல என ஆளும்கட்சி தரப்பில், அமைச்சர்கள் வரை மாறி மாறி அறிக்கை விட்டுக் கொண்டிருக்க, அவர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தான் என்பதற்கான ஆவணங்கள், ஆதாரங்களை எதிர்கட்சியினர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அவர் மீது எந்த வழக்குகளும் இல்லை என போலீஸ் தரப்பில் சொல்லப்படும் நிலையில், ஞானசேகரன் ஏற்கனவே ஒரு கடத்தல் வழக்கில் குடும்பத்தினருடன் சிக்கிய விவகாரம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து, இந்த வழக்கை நுணுக்கமாக கண்காணிக்கும் அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: ஞானசேகரன் பழைய குற்றவாளி இல்லை என, எடுத்த எடுப்பிலேயே போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதும், அவனது பின்புலம் குறித்து விசாரித்தோம். அப்போதுதான் அவன், 2018ல் ஒரு கடத்தல் வழக்கில் ஈடுபட்டு குடும்பத்துடன் கைது செய்யப்பட்ட விபரம் தெரிய வந்தது. அந்த சமயத்தில், மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்த ஞானசேகரன், தனது நண்பர்கள் சுரேஷ், முரளியுடன் சேர்ந்து, புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த தொழிலதிபர் முத்துக்குமரனை கடத்தி, பணம் பறிக்க திட்டம் போட்டனர். ஞானசேகரன், இதை தனது இரு மனைவிகளான சரண்யா, விக்டோரியாவிமும், தாய் கங்கா தேவியிடமும் சொல்ல, அவர்களும் கடத்தல் திட்டத்தில் சேர்ந்து கொண்டனர். 2018 ஜூலை 30ல் கத்தி, துப்பாக்கி முனையில் முத்துக்குமரனை கடத்திய ஞானசேகரன் கும்பல், அவரது குடும்பத்திடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். போலீஸ் நெருங்குவதை அறிந்து முத்துக்குமரனை சாலையோரம் வீசிவிட்டு தப்பியோடிய நிலையில் பின்னர் போலீஸ் பிடியில் சிக்கினர். இந்த வழக்கில் ஞானசேகரன், நண்பர்கள், குடும்பத்தினர் என மொத்தம் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஞானசேகரன் ஜாமினில் வெளி வந்துள்ளார். அதன்பிறகே அவர், அரசியல்வாதிகளுடனான நட்பை, வேகமாக வளர்த்துக் கொண்டுள்ளார். போலீஸ் அதிகாரிகள் தொடர்பும் கிடைத்துள்ளது. இதை வைத்து, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது பல வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆள்கடத்தல் தொடர்பான ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஞானசேகரன் மீதான மற்ற வழக்குகள் குறித்தும் தகவல் சேகரிக்கப்படுகிறது. ஞானசேகரன் பின்புலம் இப்படி இருக்கும்போதே, அவரை காப்பாற்றும் விதமாக அரசு தரப்பில், சப்பை கட்டு கட்டுவது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை