உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து பரபரப்பு | Tanker lorry | Kovai

சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து பரபரப்பு | Tanker lorry | Kovai

கேரளா கொச்சியில் இருந்து இன்று அதிகாலை பாரத் டேங்கர் லாரி எல்பிஜி கேசுடன் தமிழகம் வந்தது. அதிகாலை 3 மணி அளவில் கோவை, அவிநாசி ரோடு மேம்பாலத்தில் ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 18 டன் எரிவாயு கொண்ட டேங்கர், தனியாக பிரிந்து மேம்பாலத்தில் உருண்டு நின்றது. இந்த அதிர்வில் சேதம் ஏற்பட்டு கேஸ் கசிய தொடங்கியது. லாரியில் இருந்தவர்கள் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கசிவை கட்டுப்படுத்தி வருகின்றனர். மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளது.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி