உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணா பல்கலை மாணவி வழக்கில் பகீர் திருப்பம் | Anna university | Anna University Case

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் பகீர் திருப்பம் | Anna university | Anna University Case

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் பகீர் திருப்பம் | Anna university | Anna University Case சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் நிறைய மர்ம முடிச்சுகள் இருப்பதாகவும் முக்கிய புள்ளியை காப்பாற்றும் முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அந்த இடம் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கும் சென்றனர். அவரிடம் விசாரணைக்கு சம்மதமா என கேட்டு அவருடைய ஒப்புதலுடன் ரகசிய விசாரணை நடத்தினர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்த அனைத்து விபரங்களையும் மாணவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாணவியின் பெற்றோா், சம்பவத்தன்று மாணவியுடன் இருந்த மாணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 189 ஏக்கரில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 139 கண்காணிப்பு கேமராக்களில் குற்றவாளி எந்த கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டாா் உள்ளிட்ட தகவல்களையும் விசாரணை குழுவினர் சேகரித்துக் கொண்டனா். தொடர்ந்து கைதான ஞானசேகரனிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்த தகவல்களையும் ஆய்வு செய்தனர். வாட்சப் சாட்டிங், மொபைல் போனில் இருந்த எண்கள், போட்டோ மற்றும் வீடியோ என அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்டது. மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் சார் எனக்கூறி செல்போன் அழைப்பில் குற்றவாளி ஞானசேகரன் பேசினார். மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என்றார் என மாணவி மீண்டும் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கில் ஞானசேகரன் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றம் நடந்த இடத்தில் ஞானசேகர் செல்போன் பிளைட் மோடில் இருந்தது. அவருக்கு எந்த செல்போன் அழைப்பும் வரவில்லை என சென்னை போலீஸ் கமிஷ்னர் அருண் கூறி இருந்தார். அவர் சொன்னதுக்கு முரணாக மாணவியின் வாக்குமூலம் அமைந்திருக்கிறது. ஞானசேகரன் செல்போனில் இருந்த பழைய வீடியோவில் அவருடன் திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் உள்ளதாக கூறப்படுகிறது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய அந்த நபரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில், முக்கிய ஆவணங்கள், ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ