இந்து முன்னணி செயலாளர் குற்றாலநாதனை கைது செய்த போலீஸ் | Kutralanathan arrested | Hindu munnani
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவம்பரில் 31 வயது பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்த கையோடு மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியாமலேயே காப்பர் டி என்ற கருத்தடை சாதனம் பொருத்தி உள்ளனர். அதை டிஸ்சார்ஜ் ஆகி செல்லும்போது அந்த பெண்ணிடம் கூறி உள்ளனர். காப்பர் டி பொருத்தியதில் ஒவ்வாமை ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அந்த பெண் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தை இந்து முன்னணி கண்டித்தது. பாதித்த பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதுடன், நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தினார். முன் அனுமதி பெறாமல் இப்படி செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மண்டல பொது சுகாதார இணை இயக்குனரிடம் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் மனு வழங்கினார்.