ரெய்டை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! | Kathir Anand | ED Raid | DMK MP | Durai Murugan
ரெய்டை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! | Kathir Anand | ED Raid | DMK MP | Durai Murugan வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் இவரது மகனும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 3ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 44 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கட்டுக் கட்டாக பெரும் தொகையை பறிமுதல் செய்ததுடன் ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2-ம் கட்டமாக நேற்று முன்தினமும் 5 பேர் அடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனை நேற்று அதிகாலை 2.10 மணிக்கு நிறைவடைந்தது. கல்லூரியின் இமெயிலில் யில் இருந்து வெளிநபர்களுக்கு அனுப்பப்பட்ட இமெயில்களை நகல் எடுத்துச் சென்றனர். சோதனை முடிந்த பிறகு கதிர் ஆனந்த் எம்.பி ஜனவரி 22-ம் தேதி சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கி உள்ளனர்.