உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செம்மொழி பூங்காவில் 4ம் ஆண்டு மலர் கண்காட்சியில் சென்னைவாசிகள் உற்சாகம்! Chennai Flower show | Semm

செம்மொழி பூங்காவில் 4ம் ஆண்டு மலர் கண்காட்சியில் சென்னைவாசிகள் உற்சாகம்! Chennai Flower show | Semm

செம்மொழி பூங்காவில் 4ம் ஆண்டு மலர் கண்காட்சியில் சென்னைவாசிகள் உற்சாகம்! Chennai Flower show | Semmozhi Poonga | Horticulture சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மலர்க்கண்காட்சி நடந்து வருகிறது. இதனை காண வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரயில், கார், படகு, யானை, மயில், முதலை, ஆமை, போன்ற உருவங்களை பலவித வண்ண மலர்களால் உருவாக்கி வைத்திருப்பதுதான். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நிலவும் சீதோஷ்ணம் காரணமாக மலர்கள் அவ்வளவு எளிதாக வாடாது. ஆனால் வெயில் வாட்டி எடுக்கும் சென்னையில் மலர்க்கண்காட்சி நடத்துவது என்பது சவலான விஷயமே. அந்த சவாலை சாத்தியமாக்கி சாதனையாகவும் ஆக்கியிருக்கின்றனர். மலைப் பிரதேசங்களில் மட்டுமே காணக்கூடிய பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி உள்ளிட்ட மலர்களை இங்கு அதே செழுமையுடன் வளர்த்து காண்பித்துள்ளனர். கண்காட்சி நடக்கும் நாட்களில் இந்த மலர்கள் வாடாமல் பராமரித்தும் வருகின்றனர்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி