/ தினமலர் டிவி
/ பொது
/ கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பேட்டி கொடுத்தவர் கைது! | Coimbatore | Viral Video
கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பேட்டி கொடுத்தவர் கைது! | Coimbatore | Viral Video
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். புலி பல் டாலருடன் கூடிய செய்யினுடன் கோவையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவருக்கு பேட்டி கொடுத்தார். இதை வெளியில் சொல்லக் கூடாது. இருந்தாலும் சொல்கிறேன். இது புலி நகம். ஆந்திராவில் விலை கொடுத்து வாங்கினேன். வேட்டைக்கு போக வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது என்றார். வீடியோ வைரலாகி வனத் துறையினர் கவனத்துக்கு சென்றது. பாலகிருஷ்ணனின் வீட்டில் சோதனை நடத்தினர். ஒரு புள்ளிமானின் கொம்பின் துண்டுகள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வன அதிகாரிகள் முன் இன்று பாலகிருஷ்ணன் ஆஜரானார்.
ஜன 19, 2025