உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் குற்றச்செயல்கள்; சாதாரண விஷயம் இல்லை chennai high court condemned

போலீஸ் குற்றச்செயல்கள்; சாதாரண விஷயம் இல்லை chennai high court condemned

போலீஸ் குற்றச்செயல்கள்; சாதாரண விஷயம் இல்லை chennai high court condemned income tax officers sub inspectors arrested 20 lakh robbery case SI raja singh சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவர், ரூ.20 லட்சத்துடன் மருத்துவக்கருவிகள் வாங்க சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், பணப்பையை கைப்பற்றினார். அது ஹவாலா பணமா? என விசாரித்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரபு, பிரதீப் ஆகியோர் ஸ்பாட்டுக்கு வந்தனர். 4 பேரும் முகமது கவுசை காரில் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டி மொத்த பணத்தையும் பறித்துக் கொண்டு அனுப்பினர். முகமது கவுசிடம் பணம் கொடுத்தனுப்பிய முதலாளி, போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் சேர்ந்து அரங்கேற்றிய இந்த பண பறிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20 லட்சத்தை வழிப்பறி செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், வருமானவரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரபு, பிரதீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு என்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணத்தை பறிமுதல் செய்து அதை வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பதாக சொல்லி விட்டு இவர்களே பங்கு போட்டுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் கைதான ராஜாசிங், வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு பேரும் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர். அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கில் இவர்கள் 4 பேர் தவிர இன்னொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் யாராவது தொடர்பில் இருந்தார்களா என விசாரணை நடக்கிறது. விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், ஜாமின் வழங்கினால் விசாரணை தடை படும் என போலீஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார். சன்னி லாய்டை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. எனவே, 4 பேர் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார். அதைக்கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வேலியே பயிரை மேய்வது போல் போலீசாரே குற்ற சம்பவத்தில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். இதுபோன்ற வழக்குகளை சாதாரண வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, இப்போதைக்கு ஜாமின் மனுவை விசாரிப்பது சரியாக இருக்காது என கூறிய நீதிபதி, விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை