தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழா | Dinamalar Manavar Pathippu Pattam Competition |
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழா | Dinamalar Manavar Pathippu Pattam Competition | Madurai தினமலர் நாளிதழ் மாணவர்களுக்கு எண்ணற்ற கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதில் ஒன்றான பட்டம் வினாடி வினா நிகழ்ச்சிக்கான தேர்வில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு நடந்தது. அதில் தேர்வான மாணவ, மாணவிகள் A டு H என 8 அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. ஒரு அணிக்கு தலா 2 பேர் வீதம் மொத்தம் 16 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.