அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர் சஸ்பெண்ட்! என்ன காரணம்? | DMK | Madurai | CM Stalin
அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர் சஸ்பெண்ட்! என்ன காரணம்? | DMK | Madurai | CM Stalin இதை முன்னிட்டு மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் மே 23ல் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினர். அன்று அதே நேரத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். இந்த கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். அதிமுக ஆதரவுடன் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினார் மேயர் இந்திராணி. அக்கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தின் பின்னணியில் அவரது கணவர் பொன்வசந்த் உள்ளார் என புகார்கள் எழுந்தன. இந்த சூழலில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி பொன் வசந்த் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்து வெளியிட்டு உள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியால் தான் இந்திராணி பொன் வசந்த் மேயர் ஆனார். அவரது கட்டுப்பாட்டில் மேயர் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு பொன் வசந்த் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. பின் அதுவும் சமரசம் செய்யப்பட்டது. முதல்வர் வரும் சூழலில் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது கட்சியில் நிலவும் உட்பூசலை காட்டுகிறது.