ஆட்சி, நிர்வாகத் திறனில் சிறந்து விளங்கியவர் அஹில்யாபாய்: மோடி புகழாரம்!
ஆட்சி, நிர்வாகத் திறனில் சிறந்து விளங்கியவர் அஹில்யாபாய்: மோடி புகழாரம்! Modi Inaugurate Indore Metro Rail Services | Modi at Madhya Pradesh | BJP | Ahilya Bai Holkar மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 7,500 கோடி ரூபாயில் 28 நிலையங்களுடன் கட்டப்பட்டுள்ள மாநிலத்தின் முதல் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். சத்னா மற்றும் தாதியா ஆகிய இடங்களில் புதிய ஏர்போர்ட்களையும் மோடி திறந்து வைத்தார். அத்துடன் முக்கிய நீர்நிலைகளில் படித்துறைகள் அமைக்கவும், பஞ்சாயத்து அலுவலக கட்டடங்கள், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புகழ்பெற்ற ராணியும், சமூக சீர்திருத்தவாதியுமான அஹில்யாபாய் கோல்கரின் 300வது பிறந்த ஆண்டை ஒட்டி, அவரை சிறப்பிக்கும் வகையில் பிரத்யேக ஸ்டாம்ப்கள், நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், கவர்னர் மங்குபாய் படேல், முதல்வர் மோகன் யாதவ், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பெண் தொழில் முனைவோர், சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.