உகாண்டா பெண்கள் அதிரடி கைது: மாட்டிவிட்ட பக்கத்து வீட்டு பெண்கள் ugandan women arrested Avinashi
உகாண்டா பெண்கள் அதிரடி கைது: மாட்டிவிட்ட பக்கத்து வீட்டு பெண்கள் ugandan women arrested Avinashi tiruppur district police crime பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டவர் பலரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த தேவராயம்பாளையம் ஜே ஜே நகர் பகுதியில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களைப் பிடித்து அவினாசி போலீசார் விசாரித்தனர். விசா இல்லாமல் தங்கியிருப்பது தெரிய வந்தது. அதைத் ெ தாடர்நது இருவரையும் போலீசார் கைது செய்தனர். Evelyn Tina ஈவ்லின் டினா (34), நகன்வாகி ஐஷா (31) Nakanwagi Aisha என விசாரணையில் தெரிய வந்தது. குடியுரிமை அதிகாரிகள் வந்து விசாரித்தனர். அப்போது பல தகவல்கள் அதிர்ச்சி வெளியாயின. அதன் விவரம் வருமாறு: டினா, ஐஷா இருவரும் தோழிகள். டினா கிறிஸ்தவர். ஐஷா முஸ்லிம். இருவரும் சுற்றுலா விசாவில் 2 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்துள்ளனர். டில்லியில் தங்கியிருந்தபடி திருப்பூரில் ரெடிமேட் துணிகளை வாங்கி உகாண்டா நாட்டுக்கு அனுப்பும் தொழில் செய்தனர். விசா காலம் முடிந்து ஓராண்டான நிலையில், தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தனர். மும்பை, புனேயில் சில மாதங்கள் தங்கியிருந்தனர். பிறகு, சென்னையிலும் தங்கியிருந்தனர். கடைசியாக, திருப்பூருக்கு வந்து தேவராயம்பாளையம் பகுதியில் 6 மாதங்களாக தங்கியிருந்தனர். ஐஷா 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். நாளுக்கு நாள் அவர் வயிறு பெருத்துக் கொண்டே போவதைக் கவனித்த அக்கம் பக்கத்து பெண்கள், டினா, ஐஷாவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். செக்அப்புக்காக ஐஷா டாக்டரிடம் சென்றுள்ளார். அதை பக்கத்து வீட்டு பெண்கள் பார்த்தனர். கர்ப்பம் தான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டனர். கணவர் துபாயில் இருப்பதாக ஹவுஸ் ஓனரிடம் ஐஷா கூறியிருக்கிறார். அப்படியிருக்க எப்படி கர்ப்பம் அடைந்தாள்? என அக்கம் பக்கத்து பெண்கள் பேசிக் கொண்டனர். அதுபற்றி ஹவுஸ் ஓனரிடம் கூறினர். அவர் வாடகை வந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தார். ஏதோ தப்பு நடக்கிறது; இப்படியே விட்டால் நமக்கும் பிரச்னை வரும் என நினைத்த அப்பகுதி பெண்கள், உகாண்டா பெண்கள் பற்றி அவினாசி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகே, போலீசார் வந்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் இந்தியாவில் போதை பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்படுவார்கள். டினா, ஐஷாவும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் அவிநாசி கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, பலத்த பாதுகாப்புடன் இரு பெண்களும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.