உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேமுதிகவுக்கு காங்கிரஸ் அழைப்பு பின்னணியில் திமுக! | DMDK | DMK | Congress | DMK Allaince

தேமுதிகவுக்கு காங்கிரஸ் அழைப்பு பின்னணியில் திமுக! | DMDK | DMK | Congress | DMK Allaince

தேமுதிகவுக்கு காங்கிரஸ் அழைப்பு பின்னணியில் திமுக! | DMDK | DMK | Congress | DMK Allaince ராஜ்யசபா எம்பி சீட் தரப்படாததால் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா கோபத்தில் உள்ளார். இந்த சூழலில் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி அவருக்கு புகழாராம் சூட்டி, அறிக்கையும் வெளியிட்டார். ஏற்கனவே திமுக கூட்டணியில் அக்கட்சியை சேர்க்க, மூத்த அமைச்சர் ஒருவர் பேச்சு நடத்தியுள்ளார். அதன் காரணமாகத்தான் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்தாண்டு அறிவிக்கப்படும் என பிரேமலதா கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விக்கு நேற்று பதில் அளித்த செல்வப்பெருந்தகை, இண்டி கூட்டணியின் தமிழக தலைவர் ஸ்டாலின். கூட்டணி குறித்து அவர்தான் முடிவு செய்வார். தேமுதிகவை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றார். இதுகுறித்து காங்., வட்டாரங்கள் கூறியதாவது: துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி தொகுதிகளில் திமுக பலவீனமாக உள்ளது. தென்காசியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுகவுக்கு அதிருப்தி உருவாகி உள்ளது. விருதுநகர், தேனி, மதுரை போன்ற மாவட்டங்களிலும், திமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது. தென்மாவட்டங்களில் திமுக கூட்டணியை பலப்படுத்த தேமுதிக ஆதரவு தேவை என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழகம் முழுதும் தேமுதிகவுக்கு 2.6 சதவீதம் ஓட்டுகள் உள்ளன. குறைந்தபட்சம் 85 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிக்கு, தேமுதிக ஓட்டுகள் கை கொடுக்கும் என உளவுத்துறையும் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் இதற்கான பேச்சு துவங்கியுள்ளது. திமுக அறிவுறுத்தலின்படியே தேமுதிகவை வரவேற்கக் காத்திருப்பதாக செல்வப்பெருந்தகை வெளிப்படையாக நேற்று தெரிவித்துள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை