உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சந்தேகமே வராமல் சம்பவம் செய்த தந்தை, மகன் | Marriage | Gold Theft | CCTV

சந்தேகமே வராமல் சம்பவம் செய்த தந்தை, மகன் | Marriage | Gold Theft | CCTV

சந்தேகமே வராமல் சம்பவம் செய்த தந்தை, மகன் | Marriage | Gold Theft | CCTV நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ்-அகிலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. முத்துக்காளிப்பட்டி அருகே உள்ள மண்டபத்தில் கடந்த மே 6ம் தேதி திருமணம் நடந்தது. மணப்பெண் வீட்டாருக்கு சொந்தமான நகைகள் 27 சவரன் நகை, ஏழரை லட்சம் ரூபாய் ரொக்கம் மணப்பெண் அறையின் பீரோவில் வைக்கப்பட்டிருந்தது. இதில் மொய்யாக வந்த நகை மற்றும் பணமும் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து பீரோவை பார்த்தபோது நகை, பணம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தனர். ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், எஸ்ஐ சுரேஷ் திருமண மண்டபத்தில் விசாரணை நடத்தினர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, சிசிடிவிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு மர்ம நபர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடியது தெரிந்தது. இந்த நிலையில் ராசிபுரம் ATC டிப்போ அருகே ஞாயிறன்று வாகன தணிக்கை நடந்தது. அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கரூரை சேர்ந்த பாலமுருகன் 55, அவரது மகன் ஹரிகிருஷ்ணன் என தெரிந்தது. இருவர் மீதும் ஈரோடு, திண்டுக்கல் போலீசில் திருட்டு வழக்கு பதிவாகி இருந்தது. இதனால் ராசிபுரம் மண்டபம் திருட்டிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மண்டபத்தில் பதிவான வீடியோ காட்சியுடன் இருவரது அடையாளத்தை போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். திருமண விழாவில் உறவினர் போல நடித்து நகை, பணம் திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். கல்யாண மண்டபங்களை மட்டுமே குறி வைத்து இதே போல தொடர்ச்சியாக திருடி வந்துள்ளனர். இதையடுத்து தந்தை, மகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் திருடிய நகை, பணத்தை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை