உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 மணி நேரம் தவித்த பிஞ்சுகள்: அரசு ஆஸ்பிடலில் அவலம் | Bodinayakanur | Government Hospital

3 மணி நேரம் தவித்த பிஞ்சுகள்: அரசு ஆஸ்பிடலில் அவலம் | Bodinayakanur | Government Hospital

3 மணி நேரம் தவித்த பிஞ்சுகள்: அரசு ஆஸ்பிடலில் அவலம் | Bodinayakanur | Government Hospital தேனி, போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீனா. பிரசவத்துக்காக போடி அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன் ஆபரேஷன் நடந்து குழந்தை பெற்றெடுத்தார். தற்போது பிரசவ வார்டில் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு குழந்தைக்கு பாலூட்டிவிட்டு மாமியாரிடம் கொடுத்துள்ளார். அப்போது திடீரென சீலிங் பேன் கழன்று வயருடன் கீழே இறங்கியது. சரியாக பிரவீனா படுத்திருந்த படுக்கையின் நடுவிலேயே விழுந்தது. நல்ல வேளையாக அவர் படுக்கையில் இல்லாததால் தப்பினார். சீலிங் பேன் கழன்றதால் பிரசவ வார்டு முழுக்க கரண்ட் கட் ஆனது. பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணிகள் இருளில் சிக்கி தவித்தனர். சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்துக்கு பிறகே எலட்ரீசியன் வந்தார். கழன்று கிடந்த சீலிங் பேன் பதிலாக வேறு மாற்றப்பட்டது. அதுவரையில் பிரசவ வார்டு முழுக்க காற்றோட்டம் இன்றி காணப்பட்டது. இதுகுறித்து கர்ப்பிணிகளின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். அவசரத்துக்கு எலக்ட்ரீசியன் மற்றும் வாட்ச்மேன்கள் இருப்பது இல்லை. கழிவறை சுத்தமாக இருப்பது இல்லை. பிரசாவத்துக்கு சென்று வந்தால் நர்ஸ்கள் பணம் கேட்கின்றனர். 60 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 20 பேர் மட்டுமே உள்ளனர். அவசர சிகிச்சைக்கு வருவோர் தேனிக்கு அனுப்பப்படுகின்றனர். போதிய பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குற்றம் சாட்டினர். Breath

ஜூன் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி