உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குஜராத்தை புரட்டிபோட்ட மழை: 2 நாளில் மட்டும் 22 பேர் மரணம் Gujarat Rain

குஜராத்தை புரட்டிபோட்ட மழை: 2 நாளில் மட்டும் 22 பேர் மரணம் Gujarat Rain

குஜராத்தை புரட்டிபோட்ட மழை: 2 நாளில் மட்டும் 22 பேர் மரணம் Gujarat Rain| Heavy rain at Amreli| Car drowned in flood at Gujarat ஆமாதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 270 பேர் பலியானது குஜராத் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்தாக, தென்மேற்கு பருவமழையும் தீவிரமாகி குஜராத்தை புரட்டி போட்டு வருகிறது. ஆமதாபாத், சூரத், வாபி, காந்திநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு வாரமாக கனமழை தாெடர்ந்து பெய்து வருகிறது. தொடர் கனமழையால் மாநிலத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், கரையோர பகுதிகளில் வசிப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போதட் மாவட்டத்தில் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில், கார் அடித்து செல்லப்பட்டது. அதில் பயணித்த நான்கு பேர் பலியாகினர். ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் 5 பேரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பாவ்நகரில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்ரேலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டது. அதை ஓட்டிச் சென்ற டிரைவர் பரிதாபமாக பலியானார். ஜூனாகட், துவாரகா, போர்பந்தர், வல்சாட், காந்திநகர், கட்ச், ராஜ்கோட், அம்ரேலி, பதான் ஆகிய பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாவ்நகரில் உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் 33 பேர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் போராடி வருகின்றனர். மாநிலத்தில் உள்ள 25 மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மாநில அரசு போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்பால், 22 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சவுராஷ்டிரா பகுதி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ