பஸ்சை மறித்து கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்த டூரிஸ்ட்கள்
பஸ்சை மறித்து கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்த டூரிஸ்ட்கள் தென்காசி மாவட்டம், பழைய குற்றால அருவியிலிருந்து இருந்து மெயின் அருவிக்கு செல்வதற்காக மகளிருக்கு இலவசமான பஸ் புறப்பட்டது. மதுரையில் இருந்து வந்திருந்த 2 பெண்கள் கையில் குழந்தையுடன் ஏற முயன்றனர். கண்டக்டர் தடுத்தார். சீட் இல்லை; அடுத்த பஸ்சில் வாங்க என்று சொல்லி இருக்கிறார். கோபமடைந்த பெண்கள், இலவச பஸ் என்பதால், தங்களை ஏற விடமால் அவமதிப்பதாக கூறி பேருந்தை மறித்தனர். பின்னே எதுக்கு ப்ரீ பஸ் விடுறீங்க; நாங்களா கேட்டோம் என்று கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போதும்கூட அவர்களை ஏற்றாமல் பஸ்சை எடுத்து சென்றனர்.
ஜூன் 24, 2025