வீடியோ வெளியிட்டு போலீஸ் அலர்ட் | Aarapakkam | Police Investigation | Tiruvallur
வீடியோ வெளியிட்டு போலீஸ் அலர்ட் | Aarapakkam | Police Investigation | Tiruvallur திருவள்ளூர் ஆரப்பாக்கத்தில் சென்ற 12ம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பட்டப்பகலில் நடுரோட்டில் சிறுமியை அடையாளம் தெரியாத வாலிபன் ஒருவன் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி காட்சிகள் சிக்கியது. 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவனை தேடினர். 10 நாட்கள் கடந்தும் அவனை பற்றி துப்பு துலங்கவில்லை. சிறுமியின் வாக்குமூலத்தை வைத்து அவன் வடமாநிலத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சந்தேகப்படும் நபரின் போட்டோ மற்றும் வீடியோக்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். விசாரணைக்கு உதவும் வகையில், சந்தேக நபரை அடையாளம் காண உதவுபவருக்கு 5 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீசாரை 99520 60948 என்ற பிரத்யேக மொபைல் எண்ணில் அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் அறிவித்து உள்ளனர்.