உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவில் இணைய போகிறேனா? ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை | OPS | DMK | ADMK

திமுகவில் இணைய போகிறேனா? ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை | OPS | DMK | ADMK

திமுகவில் இணைய போகிறேனா? ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை | OPS | DMK | ADMK முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியல் இல்லை என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நான் முதல்வர் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல். முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த வித அரசியலும் இடம்பெறவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதல்வரிடம் நேரில் நலம் விசாரித்தேன். முதல்வரின் மூத்த சகோதரர் மு.க. முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்க சென்றேன். நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் வதந்தி பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் எள்ளளவும் உண்மையில்லை. முதல்வர் உடனான சந்திப்பை வைத்து என்னை திமுகவின் பி டீம் என பேசுகின்றனர். முதல்வரை நான் சந்தித்ததை வைத்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர். முதல்வர் உடனான சந்திப்பு தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு. இந்த சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அடுத்து சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியை நான் ஏதோ இப்போதுதான் வெளியிடுவதுபோல சில விமர்சனங்கள் எழுகின்றன. இது முற்றிலும் தவறு. சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அறிக்கை வெளியிட்டவன் நான். இதேபோன்று, ஈவெ ராமசாமி, அண்ணாதுரை பற்றி விமர்சித்து பேசிய இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்தேன். இதே போன்று, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க உத்தரவிட்டேன். நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் நலன் என்று வந்துவிட்டால் ஜெயலலிதா வழியில் செயல்படக் கூடியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் கூறினார்.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !