உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தைரியம் இருந்தா ஊருக்குள் வா - சவால் விட்டு தீர்த்து கட்டிய சிறுவன் | Hosur | finance employee

தைரியம் இருந்தா ஊருக்குள் வா - சவால் விட்டு தீர்த்து கட்டிய சிறுவன் | Hosur | finance employee

தைரியம் இருந்தா ஊருக்குள் வா - சவால் விட்டு தீர்த்து கட்டிய சிறுவன் | Hosur | finance employee ஓசூர், தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், வயது 32. இவரது மனைவி திரிஷா. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வசூலிக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஸ்லாம் என்பவருக்கும் மோதல் இருந்துள்ளது. திங்களன்று இரவு அஸ்லாம், 15 வயது சிறுவனுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது வெங்கட்ராஜ் அவர்களை தடுத்துள்ளார். குழந்தைகள் இருக்கும் தெருவில் இப்படி வேகமா போகலாமா என கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறுவனை வெங்கட்ராஜ் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தைரியம் இருந்தா ஊருக்குள் வா என்றானாம். இதையடுத்து வெங்கட்ராஜ் தொரப்பள்ளி ஊராட்சி அலுவலகம் அருகே சென்றுள்ளார். அப்போது சவால் விட்ட சிறுவன், அவன் ஆட்கள் அங்கே கூடி இருந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து வெங்கட்ராஜை சரமரியாக தாக்கியுள்ளனர். கத்தியால் அவரது உடலில் பல இடங்களில் வெட்டி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கட்ராஜ் சம்பவ இடத்திலே இறந்தார். சம்பவம் குறித்து ஓசூர் போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. வெங்கட்ராஜ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கட்ராஜை கொலை செய்த 15 வயது சிறுவன், அஸ்லாம், நவீன் ஆகிய 3 பேர் ஓசூர் போலீசில் சரணடைந்தனர். இன்னும் சிலர் சிலர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட வெங்கட்ராஜுக்கும் அவரை கொலை செய்த தரப்புக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம், பிளக்ஸ் பேனர் வைப்பது, எருது விடும் நிகழ்ச்சி ஆகியவற்றில் இரு தரப்பினரும் அவ்வப்போது சண்டை போட்டு வந்துள்ளனர். இந்த முன் பகையே இந்த கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

ஆக 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை