உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாய் கைவிட்டும் தளராத குட்டி முகி | Cheetah | African cheetah | Guno park

தாய் கைவிட்டும் தளராத குட்டி முகி | Cheetah | African cheetah | Guno park

தாய் கைவிட்டும் தளராத குட்டி முகி | Cheetah | African cheetah | Guno park ஒரு காலத்தில் இந்திய வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிவிங்கிப்புலிகள் இருந்தன. தொடர் வேட்டை காரணமாக, முற்றிலும் அழிந்து போயின. கடைசியாக சத்தீஸ்கர் வனப்பகுதியில் 1950ல் சிவிங்கிபுலி தென்பட்டது. அதன்பின் 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கிபுலி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியக்காடுகளில் அந்த இனம் முற்றிலும் அழிந்து போனதாகவே அறிவிக்கப்பட்டது.
 சிவிங்கி புலி இனத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தது. ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
 பிரதமர் மோடியால் மத்திய பிரதேசம் குனோ-பல்புர் தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டன. சோக நிகழ்வாக வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக சிவிங்கி புலிகள் ஒவ்வொன்றாக இறக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அழிந்த இனத்தை மீட்டெடுக்க வனத்துறையில் விடாப்பிடியாக முயற்சி மேற்கொண்டனர். இப்போது அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. 2022ல் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு இந்திய மண்ணில் பிறந்த முதல் குட்டியான முகி, வெப்ப அலையில் மூன்று உடன்பிறப்புகளை இழந்து தனது தாயால் கைவிடப்பட்ட பிறகும் உயிர் பிழைத்து விட்டது.
 இப்போது அந்த முகிக்கு 2 வயதாகிறது. மார்ச் 29, 2023ல் முகி பிறந்தது. இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் வனத்துறையினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 இப்போது குனோ பூங்காவில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகள், அவை ஈன்ற குட்டிகள் என மொத்தம் 25 சிவிங்கிப்புலிகள் உள்ளன.

செப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !