உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வரலாறு கற்று தந்துள்ளது: பாரிசில் பிரதமர் மோடி பேச்சு No job loss | Jobs nature will change | PM M

வரலாறு கற்று தந்துள்ளது: பாரிசில் பிரதமர் மோடி பேச்சு No job loss | Jobs nature will change | PM M

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சிமாநாடு இன்று துவங்கியது. மாநாட்டுக்கு இணை தலைமை ஏற்று பிரதமர் மோடி பேசியதாவது- ஏஐ தொழில்நுட்பம் நமது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைமுறை முதலியவற்றை மாற்றி அமைத்து வருகிறது. அது இந்த நூற்றாண்டில் மனித குலத்துக்கான மென்பொருளை எழுதுகிறது. மற்ற தொழில்நுட்பங்களில் இருந்து அது மிகவும் வித்தியாசமானது. அது மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அற்புதமானவை. அந்த தொழில் நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல்களைப் பரப்புதல் போன்றவற்றால் ஏற்படும் கவலைகளை தீர்க்க வேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பிற துறைகளை ஏஐ தொழில்நுட்பத்தால் மேம்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கானவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடையும் நமது பயணத்தை எளிதாக்கவும், வேகப்படுத்தவும் ஏஐ உதவும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு வரும் என அஞ்சுகிறோம். தொழில்நுட்பத்தால் வேலைகளின் இயல்பு மாறுமே தவிர வேலை இழப்புகள் வராது என்பதை முந்தைய வரலாறுகள் நமக்கு எடுத்துச் சொல்லி இருக்கின்றன. ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்துக்காக, மக்களின் திறன்களை மேம்படுத்த நிறைய முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி