உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பருவ மழைக்காக 36 படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி | Northeast monsoon |Chennai corporation | Bought

பருவ மழைக்காக 36 படகுகள் வாங்கிய சென்னை மாநகராட்சி | Northeast monsoon |Chennai corporation | Bought

தமிழகத்தில் அக்டோபர் 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பேரிடர் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக மீட்டு வர 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தப் படகுகள் மண்டலம் வாரியம் நிறுத்தப்பட்டு, வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டலம் 3, 14க்கு படகுகள் அனுப்பி வைக்கும் போட்டோவையும் சென்னை மாநகராட்சி அதன் சோசியல் மீடியா பக்கத்த்தில் வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பருக்குள்ளாவது மழைநீர் வடிகால் பணிகளை முடித்து மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால் முன்னெச்சரிக்கையாக படகு வாங்கி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை