உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அரசு தாமதம் ஏன்? தவிப்பில் 250 பேர் | TN Nurses | Germany | TNGovt

தமிழக அரசு தாமதம் ஏன்? தவிப்பில் 250 பேர் | TN Nurses | Germany | TNGovt

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலை ஏற்படுத்தி தரப்படும் என சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டது. பி.எஸ்சி நர்சிங் படித்து, ஓராண்டு அனுபவமுள்ள 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்கு, ஜெர்மன் மொழி பயிற்சி சென்னையில் வழங்கப்படும். அதன்பின் அரசு மூலம் நர்சிங் பணிக்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நர்சிங் முடித்த பலரும் ஜெர்மனியில் பணிபுரியும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதில் 250 பேர் வரை தேர்வாகினர். தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் நவம்பரில் அனுப்பப்பட்டது. ஆனாலும் ஜெர்மன் மொழி பயிற்சி வகுப்புகள் இதுவரை துவங்கப்படவில்லை. பயிற்சி வகுப்பை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க வேண்டும் என்பதால் துவக்க விழா தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. பயிற்சி எப்போது துவங்கும் என சேவை மையத்தை தொடர்பு கொண்டாலும் அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை என தேர்வானவர்கள் தவிப்பில் உள்ளனர்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை