தொடர் விடுமுறையில் காலியாகும் சென்னை | onam celebration | chennai traffic
கிடைச்சாச்சு 3 நாட்கள் லீவு மொத்தமா கிளம்பிய மக்கள்! டிராபிக் ஜாமில் சிக்கி திணறிய ஜிஎஸ்டிரோடு மிலாடி நபி, ஓணம் பண்டிகை நாளை, கொண்டாடப்படுகிறது. அடுத்து சனி, ஞாயிறு சேர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் ஏற்பட்ட வாகன நெரிசலால் ஜிஎஸ்டி சாலை திணறியது. நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் டிராபிக் ஜாமில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
செப் 04, 2025