/ தினமலர் டிவி
/ பொது
/ நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்ட பேரிடர் மீட்புபடை | Ooty | Rescue Force
நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்ட பேரிடர் மீட்புபடை | Ooty | Rescue Force
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கனமழை கொட்டுகிறது. கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார கிராமங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகள் சேதமடைந்து உள்ளது. நீலகிரி, கோவை உட்பட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வயநாடு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 32 பேர் நீலகிரி வந்துள்ளனர். சிறு சிறு குழுக்களாக பிரிந்து கூடலூர் மற்றும் குந்தா பகுதிகளுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர்.
ஆக 01, 2024