உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பரவிய தகவல்களுக்கு OPS பதில் இது தான் | OPS son | Vijay party | TVK | Panneer Selvam

பரவிய தகவல்களுக்கு OPS பதில் இது தான் | OPS son | Vijay party | TVK | Panneer Selvam

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறி வரும் நிலையில், அவரது மகன் ரவீந்திரநாத் விரைவில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாக தகவல் வெளியானது. அதிமுகவில் எம்பியாக இருந்த அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பதவியையும் இழந்தார். அவர் அதிருப்தியில் இருந்த நேரம் பன்னீர் செல்வம் பாஜவுடன் கூட்டணி வைத்து களமிறங்கினார். டெல்லியில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற போது அங்கே தந்தையுடன் சென்று விழாவில் கலந்து கொண்டார் ரவீந்திரநாத் . அதிமுகவின் மீதான அதிருப்தியில் அவரும் பாஜவில் இணையலாம் என்றே அப்போது கூறப்பட்டது. ஆனால் அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் விஜய் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு, பேட்டி ஒன்றில் விஜய்க்கு ரவீந்திர நாத் வாழ்த்து சொன்னார். கூடவே தமிழக மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்து தந்தால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் எனவும் சூசகமாக கூறி இருந்தார். தொடர்ந்து விஜய் கொடியை அறிமுகம் செய்த அன்றும் விஜயின் அரசியல் பயணம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து கூறி இருந்தார். இந்த சூழலில் தான் அவர் விஜய் கட்சியின் சேர போவதாக தகவல் பரவ ஆரம்பித்தது. விஜய் மாநாட்டுக்கு அவர் பொருளாதார உதவிகளை செய்ய அவர் காத்திருப்பதாகவும், விஜய் கட்சியில் சேர்ந்து தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு டஃப் கொடுப்பதே அவர் பிளான். விஜய் கட்சியின் முதல் மாநாட்டில் அவர் கட்சியில் இணையலாம் என்றும் கூறப்பட்டது. இந்த சூழலில் விஜய் கட்சியில் அவரது மகன் சேர போவது குறித்து பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. விஜய் கட்சியில் எனது மகன் சேருகிறார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் சதி என ஒரே அடியாக ஆஃப் செய்தார் பன்னீர் செல்வம்.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !