உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹிந்து மதம் பற்றி அவதூறு பா.ரஞ்சித் மீது போலீசில் புகார் Pa. Ranjith| yuvaraj|complaint

ஹிந்து மதம் பற்றி அவதூறு பா.ரஞ்சித் மீது போலீசில் புகார் Pa. Ranjith| yuvaraj|complaint

ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாரத் ஹிந்து முன்னணி வடசென்னை மாவட்ட தலைவர் யுவராஜ் புகார் அளித்தார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது: சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நான் படித்த பள்ளியின் எதிரில் ஒரு நந்தி இருக்கும். அந்த கல் மீது ஏறினால், வானத்து மேல் பறந்து விடலாம் எனக் கூறுவார்கள். அதன்மேல் ஏறி நிற்பேன். வானத்தில் பறக்கிறேனா, இல்லையா என பார்ப்பேன். புத்தகம் மீது ஏறி நின்றால் படிப்பு வராது என்று கூறுவர்; நான் வேண்டுமென்றே ஏறி உட்கார்ந்து பார்ப்பேன். சின்ன வயதில் அதை எல்லாம் செய்திருக்கிறேன்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ