உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிரம்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிரம்

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடிவருகின்றனர். பயங்கரவாதிகளை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் வகையில், அவர்கள் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று ஆனந்த்நாக் மாவட்ட காவல்துறை அளிவித்துள்ளது. காவல்துறையின் அறிவிப்பில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க உதவும் வகையில் தகவல் அளிப்போருக்கு 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும். தகவல் கொடுப்பவரின் அடையாளங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து செயல்படும் லஷ்கரே தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான TRF தான் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் படத்தை ஏற்கனவே போலீசார் வெளியிட்டு இருந்தனர்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை