உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுற்றுலா பயணிகளை காப்பாற்ற தன் உயிரை விட்ட குதிரை ஓட்டி Pahalgam horse rider |terrorists| shot dead

சுற்றுலா பயணிகளை காப்பாற்ற தன் உயிரை விட்ட குதிரை ஓட்டி Pahalgam horse rider |terrorists| shot dead

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உலக தலைவர்கள் பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஸ்ரீநகர் சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் சொன்னார். ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினர் பயங்கராவதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சமயத்தில் பைசரான் சுற்றுலா தளத்தில் நடந்த பல்வேறு சம்வங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. உயிர் தப்பிய பலரும் அங்கு நடந்ததை அதிர்ச்சியுடன் விவரிக்கின்றனர். அந்த வகையில் உள்ளூர் குதிரை ஓட்டி ஒருவர் செய்த சம்பவம் இப்போது தெரியவந்துள்ளது. பயங்கராவதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபோது சுற்றுலா பயணிகள் அலறி துடித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள சிதறி ஓடினர். அப்போது அங்கிருந்த உள்ளூர் குதிரை ஓட்டியான சையத் அடில் ஹூசைன் ஷா, தனது எதிரில் இருந்த பயங்கரவாதியிடம் தைரியமாக மோதியுள்ளார். சுற்றுலா பயணிகளை காப்பாற்ற, அந்த பயங்கராவதியிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பயங்கரவாதி ஷாவை சரமாரியாக சுட்டுக் கொன்றதும் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட ஷாவின் குடும்பத்தினர் தகவல் அறிந்து அழது புலம்பினர். என் மகன் நேற்று வேலைக்கு சென்றான். மதியம் 3 மணி அளவில் தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டோம். நாங்கள் ஷாவுக்கு போன் செய்தோம். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாலை 4.40 மணிக்கு மீண்டும் போன் செய்தோம். அப்போது போன் இயங்கியது. ஆனால், யாரும் எடுத்துப் பேசவில்லை. இதனால் போலீஸ் நிலையம் சென்றோம். அப்போதுதான் என் மகன் துப்பாக்கிச்சூட்டில் சிக்கியது தெரியவந்தது. இதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் உரிய விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும் என கொல்லப்பட்ட ஷாவின் தந்தை சையத் ஹைதர் ஷா Syed Haider Shah கூறினார்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !