/ தினமலர் டிவி
/ பொது
/ கேக் வாங்கி சென்ற பாக் தூதரக ஊழியர்: பகீர் காட்சி | Pakistan High Commission | Cake
கேக் வாங்கி சென்ற பாக் தூதரக ஊழியர்: பகீர் காட்சி | Pakistan High Commission | Cake
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகே சுற்றுலாத்தளமான பைசரன் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் 1 நேபாளி உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் புதனன்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏப் 24, 2025