பாகிஸ்தானுக்கு இந்தியா தரமான பதிலடி |pakistan vs TTP |pakistan taliban attack | india vs pakistan
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா Khyber Pakhtunkhwa மாகாணம் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் நேற்று நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியது. அணி வகுத்து சென்ற ராணுவ வாகனங்களை குறி வைத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது. சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பிக்கொண்டு வந்த ஒரு சரக்கு வாகனம் மின்னல் வேகத்தில் ராணுவ கான்வாயில் புகுந்தது. ராணுவ வண்டிகள் மீது சரக்கு வேன் மோதிய மறுகணமே சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறின. இந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 16 பேர் உடல் சிதறி இறந்தனர். 10 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். சரக்கு வேனை ஓட்டி வந்த தாக்குதல் நடத்தியவனும் இறந்தான். குண்டு வெடித்த போது அந்த பகுதியில் இருந்த 2 வீடும் இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹபிஸ் குல் பஹதூர் அமைப்பின் தற்கொலை படை பிரிவு பொறுப்பேற்றது. இது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் ஒரு கிளை பிரிவாகும். தெஹ்ரீக்-இ-தலிபான்களை பாகிஸ்தான் தலிபான்கள் என்றும் அழைக்கின்றனர். இவர்கள் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். பாகிஸ்தான் தலிபான்களும் ஆப்கனை ஆட்சி செய்யும் தலிபான்களும் வேறு வேறு அமைப்பினர் என்றாலும், இரண்டுமே நட்பு அமைப்புகள் தான்.