பாகிஸ்தான் மாஜி பிரதமர், ராணுவ தளபதி பேச்சு சாட்சி | Pakistan Military | Kargil | 1999 Kargil war
1999ல் இந்தியா, பாகிஸ்தான் இடையே கார்கில் போர் வெடித்தது. பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு காஷ்மீரின் கார்கில் அருகே உள்ள பகுதியை ஆக்கிரமித்தது. இதை எதிர்த்து நம் ராணுவம் போரிட்டது. அந்தாண்டு மே மாதம் துவங்கிய போர் ஜூலை வரை நடந்தது. 85 நாள் நடந்த போரில் பாகிஸ்தானை விரட்டி அடித்து இந்தியா வெற்றி கண்டது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ல் கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் இந்த போரில் எங்கள் ராணுவத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை. காஷ்மீர் சுதந்திரத்துக்காக போராடிய குழுக்கள் தான் இந்திய ராணுவத்துடன் போரிட்டன என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்து வந்தது. பாகிஸ்தான் கூறி வந்த பொய் கடந்த மே மாதம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பால் உடைந்தது. ஷெரிப் தான் போர் நடந்த போது பிரதமராக இருந்தவர். தனது கட்சி கூட்டத்தில் பேசிய அவர் 1999ல் பாகிஸ்தான் 5 அணு குண்டு சோதனைகளை நடத்தியது. அதன் பிறகு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் வந்து ஒப்பந்தம் போட்டார். இந்தியா, பாகிஸ்தான் இடையே சமாதான ஒப்பந்தமான லாகூர் உடன்படிக்கை தான் அது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீறி விட்டோம். அது எங்கள் தவறு தான் என கூறியது சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த சூழலில் மேலும் ஒரு ஆதாரமாக அந்நாட்டின் ராணுவ தளபதியே இதை ஒப்புக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் பேசினார். இந்தியாவுடன் 1948, 1965, 1971ல் நடந்த போர்களில் நம் நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்தனர்.