அடகு வைத்ததாக சொன்ன ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி palanisamy| eps| admk alliance| mk stalin| dmk
அதிமுக- பாஜ கூட்டணி நேற்று உறுதியான நிலையில், திமுக செய்த வரலாற்று பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியிருந்தார். தமிழக நலனுக்கான குறைந்தபட்ச செயல்திட்டம் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக கூட்டணியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்கள்; அடுத்து தமிழகத்தை அடமானம் வைக்க போகிறார்களா? என கேட்டார். குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே அதில் மாநில உரிமை, மொழியுரிமை, நீட்விலக்கு, தொகுதி மறுவரையறை இடம்பெறுமா? மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முடியாத உள்துறை அமைச்சர், அமைதியான தமிழகத்தை பற்றி பேசலாமா? என்று ஸ்டாலின் கேட்டிருந்தார்.