/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / ஊராட்சி அலுவலகம் திறப்பதில் சர்ச்சை! அமைச்சரின் அழுத்தம் காரணமா? | Panchayat Chairman | Sivagangai                                        
                                     ஊராட்சி அலுவலகம் திறப்பதில் சர்ச்சை! அமைச்சரின் அழுத்தம் காரணமா? | Panchayat Chairman | Sivagangai
சிவகங்கை மாவட்டம் இளங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் 20 லட்சம் செலவில் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 6 மாதமாகியும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான பெரிய கருப்பன் திறப்பு விழாவை புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. இளங்குடி ஊராட்சி தலைவர் ஜோசப், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் முன்னிலையில் இன்று கட்டடத்தை திறக்க ஏற்பாடு செய்தார். காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜோசப்பை நாச்சியாபுரம் போலீசார் 2022ல் நில பிரச்னை தொடர்பான வழக்கு ஒன்றை காரணம் காட்டி கைது செய்தனர்.
 டிச 12, 2024