140 ஊராட்சிகளில் தொடங்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் வீண் | Rural Students Sports Facilities Issue
கிராமங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை சீரமைக்க வேண்டும் என கடந்த 2024, நவம்பரில், தினமலர் செய்தி வெளியானது. அந்த சமயத்தில், அப்போதைய துணை முதல்வரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி கடலுாருக்கு வருகை தந்தார். மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் தலா 10 ஊராட்சிகளை முன்மாதிரியாக தேர்ந்தெடுத்து, புதிதாக 140 விளையாட்டு மைதானங்கள் அமைத்திட உத்தரவிட்டார். அதற்குரிய விளையாட்டு உபகரணங்களும், விளையாட்டுத்துறை சார்பில் வழங்கப்பட்டன. இந்த பணிகள் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கிராமங்களில் இருந்து மாவட்ட, மாநில போட்டிகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் மற்றும் தீய பழக்கங்களில் இருந்து இளைஞர்கள் விடுபடவும் நல்வாய்ப்பாக அமைந்தது. மேலும், கிராமப்புற இளைஞர்களை கவரும் வகையில், அந்தந்த பஞ்சாயத்து தலைவர்களும் விளையாட்டு உபகரணங்களை சொந்த செலவில் வாங்கி கொடுத்தனர். ஆனால், இப்போது உள்ளாட்சி பதவிக்காலம் முடிந்து, அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருப்பதால், கேட்பாரின்றி விளையாட்டு மைதானங்களும் பாழாகின. தற்போது, குடிநீர், மின்விளக்கு போன்ற அத்தியாவசிய தேவைகளில் மட்டுமே அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். விளையாட்டு மைதானங்களில் முட்புதர் மண்டி, விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி உள்ளது. அங்கிருந்த உபகரணங்களும் சமூக விரோதிகளால் சேதப்படுத்தியும், திருடும் போனது. #PanchayatPlaygrounds #SportsInfrastructure #RuralSports #StudentProtest #MaintenanceIssue #TNAdministration #SportsDevelopment #SchoolSports #PublicIssue #CuddaloreDistrict #TNGovernment #DistrictNews #DinamalarNews