உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாண்டியன் எக்ஸ்பிரஸில் சடலமாக வந்த இளைஞர்! | Pandian Express | Chennai Train Delayed | Pandian Expr

பாண்டியன் எக்ஸ்பிரஸில் சடலமாக வந்த இளைஞர்! | Pandian Express | Chennai Train Delayed | Pandian Expr

விக்கிரவாண்டி ரயில்வே பாலத்தில் அபாய அளவை தாண்டி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ரயில் நிறுத்தப்பட்டது. மாம்பழப்பட்டு ஸ்டேஷனில் ரயில்வே ஊழியர்களை தவிர ஒருவரும் இல்லை. பயணிகள் கிட்டத்தட்ட 10 மணிநேரம் உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர். இடையிலேயே வேறு வழிகளை தேர்வு செய்யுமாறு ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. நேரம் செல்ல செல்ல சிரமம் தாங்க முடியாமல் தனி கார் வசதி ஏற்படுத்தி சில பயணிகள் அதிக தொகை கொடுத்து சென்னைக்கு புறப்பட்டனர். ரயிலை நம்பி வந்த பாமர மக்கள் நம்பிகையோடு இடர்பாடுகளை தாங்கி கொண்டு காத்து இருந்தனர். பகல் 12 மணிக்கு பிறகு ரயில் கிளம்பியது. ஆனால் வேலூர், காட்பாடி வழியாக சுற்றி இரவு 7 மணிக்கே எக்மோர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. 15 மணி நேர தாமதத்தால் பலர் பெரும் அவதிக்கு உள்ளான நிலையில் ஒருவர் இறந்த சம்பவமும் தெரிய வந்தது. அவர் பெயர் அஜித் குமார் வயது 30. புளியங்குடியை சேர்ந்தவர். அஜித்குமார் மஞ்சள் காமாலை நோயாளி. சிகிச்சைக்காக சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார். இன்று அதிகாலை வர வேண்டிய ரயில் மாலை வரை தாமதமானதால் பல இடர்பாடுகளை அவர் சந்தித்ததாக சக பயணிகள் கூறுகின்றனர். மாம்பழப்பட்டு ஸ்டேஷனில் ரயில் நின்றதில் இருந்து அஜித் சரியாக உணவு அருந்தவில்லை என கூறப்படுகிறது. அப்போது இருந்தே தனக்கு உடம்பு சரி இல்லை என அவர் கூறி வந்துள்ளார். காட்பாடி வந்த போது அவர் தன் நிலைமையை ரயில்வே போலீசாரிடம் கூறியதாகவும் அவர்கள் சென்னை போய் சிகிச்சை எடுக்க அறிவுறுத்தியதாகவும் உடன் பயணித்த பயணிகள் கூறுகின்றனர். பீச் ஸ்டேஷன் வந்த போது அஜித் குமார் இறந்துள்ளார். எக்மோர் ஸ்டேஷன் வந்த பிறகே இது தெரிய வந்துள்ளது.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ