உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள்! Paralympic | Paris | Nitesh Kumar | Gold Medal

பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள்! Paralympic | Paris | Nitesh Kumar | Gold Medal

பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் 4,400 பேரும் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். பாராலிம்பிக் போட்டியில் ஆண்கள் பாட்மின்டன் ஒற்றையர் இறுதிப்போட்டி நடந்தது. இந்திய வீரர் நிதேஷ்குமார், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார். நிதேஷ்குமார் 21-14, 18-21, 23-21 என்ற புள்ளிக்கணக்கில் பெத்தேலை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இந்தியா பெறும் இரண்டாவது தங்க பதக்கம் இது. முன்னதாக நடந்த வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா கலந்து கொண்டார். அவர் 42.22 மீட்டர் தூரர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷார் குமார் பங்கேற்றார். அதில் 2.04 மீட்டர் உயரம் தாண்டி நிஷாத்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2021ல் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியிலும் நிஷாத்குமார் 2.06 மீட்டர் தாண்டி வெள்ளி வென்றிருந்தார்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை